பவானி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பவானி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

பவானி காவிரி கரையோர மக்களுக்கு வட்டாட்சியர் ஒலிப்பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பவானி சுற்றுவட்டார பகுதியில் வட்டாட்சியர் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார்.

காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி எட்டியது.

இதையடுத்து, அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேறும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால், ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி பகுதிக்குட்பட்ட காவேரி ஆற்றின் கரையோரம் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் பொதுமக்கள் மத்தியில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.


தொடர்ந்து சிங்கம்பேட்டை, வரதநல்லூர், சன்னியாசிபட்டி, கேசரிமங்கலம், காவிரி வீதி, உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும்,வெள்ள அபாயம் மூலம் ஏற்படும் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பவானி வட்டாட்சியர் ஆய்வு நடத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!