ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
X

பர்கூர் மலைக்கிராமத்தில் வேலாம்பட்டியில் செம்மறை மாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்க நிகழ்ச்சியின் போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கால்நடை பராமரிப்புத் துறை ஈரோடு மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கால்நடை பராமரிப்புத் துறை ஈரோடு மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இந்தியாவில் உள்ள கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். செல்போன்களில் அதற்கென ஒரு செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.


ந்த நிலையில், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வேலாம்பட்டியில் பழங்குடியின கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்.பாஸ்கர் தலைமையில், துணை இயக்குநர் பிரிசில்லா மாலினி, பர்கூர் செம்மறை மாடுகள் சங்க தலைவர் அசோக ராஜேந்திர சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியில் பர்கூர் பராம்பரிய இன செம்மறை மாடுகள் கணக்கெடுக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை ஈரோடு மண்டல இணை இயக்குநர் பாஸ்கர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைக்கிராமத்தில் உள்ள வேலாம்பட்டியில் பழங்குடியினர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பர்கூர் பராம்பரிய இன செம்மறை மாடுகள், எருமை, ஆடுகள், நாய்கள், வாத்துக்கள், கோழிகள், பூனை உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆறு லட்சம் குடும்பங்களிலும் கணக்கெடுக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் நடக்கும் இப்பணி அடுத்த ஆண்டு 2025 பிப்ரவரி மாத இறுதியில் முடிவடைகிறது.


தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மீன்வளத்துறையின் சார்பில் இந்தியாவில் உள்ள கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் இன்று 500 க்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுக்கும் பணியானது தொடக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாட்டில் உள்ள கால்நடைகளின் இனப்பெருக்க விகிதம் குறித்து கண்டறிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கால்நடைகளுக்கு தேவையான திட்டங்கள் குறிப்பாக மருந்துகள் தீவனங்கள் கொள்முதல் மற்றும் உற்பத்தி செய்தல் போன்றவற்றிற்கு கணக்கெடுக்கும் பணி மிக முக்கிய பங்காற்றுகிறது.

இதன் மூலம் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டுள்ள குடும்பத்தினரின் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் எனவே இவற்றை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்