Bharathiyar Birthday Celebration ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா

Bharathiyar Birthday Celebration  ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா
X
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா ஈரோட்டில் கொண்டாடப்பட்டது.
Bharathiyar Birthday Celebration ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், மகாகவி பாரதியார் 142வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Bharathiyar Birthday Celebration

ஈரோடு மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மகாகவி பாரதியாரின் 142வது பிறந்தநாள் விழா ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவர் ஆறுமுகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் ஆகியோர் பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா மாமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கொற்றவேல், சிந்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், மாவட்ட மாணவரணி தலைவர் அன்புதம்பி, வர்த்தக அணி செல்லத்துரை, டிப்பர் பழனிச்சாமி, ராம லட்சுமணன், முன்னாள் தலைமை ஆசிரியர் குப்புசாமி ,சந்திரசேகர், வட்டாரத் தலைவர் புவனேஷ், முருகன், மணிகண்டன், ஸ்ரீரங்கம், தர்மன், மகளிர் அணியைச் சார்ந்த குட்டி என்கின்ற ஜெய் ஸ்ரீ, பாப்பாத்தி, விமலா, காந்திமதி, கவிதா, கஸ்தூரி, விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரபிக் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!