ஆப்பக்கூடலில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு

ஆப்பக்கூடலில் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் மீது வழக்குப்பதிவு
X

ஆப்பக்கூடல் காவல் நிலையம் (பைல் படம்)

ஆப்பக்கூடல் அருகே பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஆ.புதுப்பாளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக் கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!