ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் விற்பனை திருவிழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விற்பனை திருவிழாவை கல்லூரி முதல்வர் வாசுதேவன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த போது எடுத்த படம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி பி.காம் மற்றும் பி.காம் (சிஏ) துறைகள் இணைந்து கேஏஎஸ்சிஓ 2025 என்ற விற்பனை திருவிழாவை கல்லூரி கலையரங்கில் நடத்தியது.
போட்டிகள் நிறைந்த இந்த வணிக உலகில் வியாபாரத்திற்கு பொருட்களை கொள்முதல் செய்தல், அவற்றை தரம் பிரிதல், விலை நிர்ணயம் செய்தல், விற்பனை, மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற வியாபாரத்தின் யுக்திகளை செய்முறையாக பயின்று மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விற்பனை திருவிழாவில் ஆர்கானிக் பொருட்கள், உணவு வகைகள், சிற்றுண்டிகள், ஜூ ஐஸ்கிரீம் கைவினை பொருட்கள், பரிசு பொருட்கள், பேன்சி பேன்சி மற்றும் மற்றும் அழ அழகு சாதன பொருட்கள், புடவை, சுடிதார் ரகங்கள், டீ சர்ட்டுகள், விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் என பல்வேறு வகையான 120-க்கும் மேற்பட்ட கடைகளை மாணவர்கள் அமைத்திருந்தனர்.
மாணவர்களின் பெற்றோர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 3000 பேர் இந்த விற்பனை திருவிழாவில் கலந்து கொண்டு கண்டுகளித்து பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்பட்டது.
இதுபோன்ற திறன் ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பி.காம் மற்றும் பி. காம் (சிஏ) துறை தலைவர்களையும், பேராசிரியர்களையும் கல்லூரி தாளாளர் தங்கவேல் மற்றும் கல்லூரி முதல்வர் வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu