அந்தியூரில் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவருக்கு பாராட்டு விழா

அந்தியூரில் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவருக்கு பாராட்டு விழா
X

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அந்தியூரில் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில், தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவர் செந்தலை.ந.கௌதமனுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.திராவிட விடுதலைக் கழக வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஆசிரியர் செங்கோட்டையன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில், இரத்தினசாமி , வேணுகோபால் , சிவக்குமார் வீராகார்த்திக் , வேங்கை பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற புலவர் செந்தலை.ந. கௌதமன் ஏற்புரையாற்றினார்.பின்னர், "திராவிடமும் தமிழ்தேசியமும் முரண்பட்டவையா" மற்றும் "தமிழ்நாடும் இடஒதுக்கீடும்" என்ற தலைப்பில் கருத்தரங்கு விளக்கவுரையை, திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் புலவர் செந்தலை.ந.கௌதமன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.இறுதியில் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் ஆசிரியர் கீ.மா.சுந்தரம் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ai future project