கள்ளிப்பட்டி அருகில் விபத்தில் பனியன் தொழிலாளி பலி
விபத்தில் உயிரிழந்த பனியன் தொழிலாளி சதாமுருகன்.
Died In Accident - ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் சதாமுருகன் (வயது 30). பனியன் கம்பெனி ஊழியர்.
இவர், நேற்று இரவு தனது பைக்கில் சத்தி - அத்தாணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். தண்ணீர்பந்தல் பகுதி அருகே சென்றபோது, திடீரென சின்னச்சாமி என்பவர் சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது சைக்கிள் மீது பைக் மோதியதில் தடுமாறி சதாமுருகன் கீழே விழுந்ததார். அப்போது, பின்னால் கிறிஸ்டோபர் என்பவர் ஓட்டி வந்த பைக், சதாமுருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சதாமுருகன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu