வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி

வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி
X

வாடிக்கையாளரை வெளியே தள்ளி கதவை பூட்டிய அதிகாரி

ஈரோடு ரங்கம்பாளையத்தில் வாடிக்கையாளரை வெளியில் தள்ளி கதவை அடைத்த வங்கி அதிகாரியால் பரபரப்பு

ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரங்கம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு துவங்குவதற்கு விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். அப்போது விண்ணப்பத்தை வாங்கிய வங்கி அதிகாரி 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியதோடு விண்ணப்ப படிவத்தை கிழித்து குப்பை தொட்டியில் விசியதாக கூறப்படுகிறது.


இதனால் வாக்குவாத்தில் ஈடுபட இளைஞரை வங்கி அதிகாரி தாக்க முயன்றதோடு, கைகலப்பில் ஈடுபட்டு இளைஞரை வங்கி அதிகாரி வெளியில் தள்ளி கதவை அடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் இளைஞரை சமரசம் செய்து முயன்று வருகின்றது.

Tags

Next Story
ai in future education