அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 36 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 580 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 270 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 420 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 410 ரூபாய்க்கும் , ரொப்பர் தார் ஒன்று 370 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 2,225 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 லட்சத்து 21 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil