அந்தியூரில் ரூ.4.51 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில் ரூ.4.51 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் 4 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 560 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 470 ரூபாய்க்கும் ஏலம் போனது.

இதேபோல், பூவன் தார் ஒன்று 380 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 330 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 250 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 420 ரூபாய்க்கு விற்பனையானது.மொத்தம் 3 ஆயிரத்து 180 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், நான்கு லட்சத்து 51 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!