அந்தியூரில் ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூரில் ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X
அந்தியூர் நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம் விற்பனை நடைபெற்றது.

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சென்னம்பட்டி, ஜரத்தல், எண்ணமங்கலம், ஆப்பக்கூடல், அத்தாணி பகுதிகளில் இருந்து விவசாயிகள் 3 ஆயிரத்து 160 வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இதில், கதலி ஒரு கிலோ ரூ.15-க்கும், நேந்திரம் கிலோ ரூ.28-க்கும், பூவன் ஒரு தார் ரூ.350-க்கும், செவ்வாழை ரூ.470-க்கும், தேன்வாழை ரூ.450-க்கும், மொந்தன் ரூ.410-க்கும், ராஸ்தாளி ரூ.320-க்கும், பச்சை நாடன் ரூ.380-க்கும், ரொப்பர் ரூ.270-க்கும் ஏலம் போயின. மொத்தம் ரூ.40 லட்சத்து 6 ஆயிரத்துக்கு வாழைத்தார்கள் விற்பனையானது. அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாழைத்தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!