கவுந்தப்பாடி சலங்கபாளையம் பால விநாயகர், பால முருகர் கோயில் கும்பாபிஷேகம்
கோயில் கும்பாபிஷேக விழாவில் தென்னிந்திய மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் நந்தகோபால் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சலங்கபாளையம் ரெட்டைவாய்க்கால் செங்குந்தர் குல சொக்க முதலி கூட்ட தெய்வங்களான பால விநாயகர், பால முருகர், கன்னிமார் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28ம் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தரிசன ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
கல்கி படத்தில் கிருஷ்ணராக வந்தது தமிழரா? யார்னு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!
தொடர்ந்து, நேற்று காலை பெருந்தலையூர் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை கவுண்டம்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சீர்கூடை மற்றும் முளைப்பாலிகை அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பால விநாயகர், பால முருகர், கன்னிமார் கருப்பணசாமி ஆலய கோபுரம் மற்றும் மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தை கவுந்தப்பாடி செல்லியாயி அம்மன் கோயில் கணேஷ் குருக்கள் நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் வாசுதேவன் மயில்வாகனன் குழுவினரின் மங்களை இசை நடந்தது. விழாவையொட்டி, 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது
விஜய்யின் மநகூ 2.0...! வேற லெவல் ப்ளான்..! திமுகவுக்கு குடச்சல் ஸ்டார்ட்..!
இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் ஆறுச்சாமி, பொருளாளர் குமரவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu