ஆப்பக்கூடல் அருகே தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு 'சீல்'

ஆப்பக்கூடல் அருகே  தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு  சீல்
X

பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில்,  ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரியில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனியார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஒரிச்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் இதே பகுதியில் கோகுல் ஆயுர்வேத மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு இவரது மருத்துவமனையில் அலோபதி மருத்துவம் பார்ப்பதற்காக, ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் புகார் செய்தார். அதன் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, மருத்துவர் தேவராஜ் வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், இது சம்பந்தமாக நடைபெற்று வந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து. இன்று பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆப்பக்கூடல் போலீசார் உதவியுடன் மருத்துவர் தேவராஜுக்கு சொந்தமான சித்தா ஆயுர்வேத மருத்துவமனை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!