பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம்: சத்தியில் கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, சத்தியில் கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.
Erode News, Erode Today News, Erode Live Updates - சத்தியமங்கலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரகாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ரீடு தன்னார்வ சேவை நிறுவனத்தின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி கையெழுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் ரீடு இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கையெழுத்து பிரச்சாரத்தை நகராட்சி சேர்மன் ஜானகி தொடக்கி வைத்தார்.
சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சரஸ்வதி, விரவு அலுவலர் விஜயலக்ஷ்மி, ஊர் நல அலுவலர்கள் வசந்தி, கல்யாணி, சமூக ஆர்வலர்கள் ஆணைகொம்பு ஸ்ரீ ராம், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். புனிதம் கலை மேம்பாட்டு மையத்தினர் கரகாட்டம், தப்பாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடம்பூர், ஆசனூர், பவானிசாகர், கோபி, அவிநாசி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் டிசம்பர் 10 வரை நடக்கிறது. மேலும், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீடு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu