/* */

அந்தியூரில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போல் அச்சிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூரில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு
X

வெள்ளித்திருப்பூர் பகுதியில் தேர்தல் திருவிழா அழைப்பிதழை பொதுமக்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி வழங்கிய போது எடுத்த படம்.

அந்தியூர் பகுதியில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி திருமண அழைப்பிதழ் போல் அச்சிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர், அத்தாணி, பிரம்மதேசம், வேம்பத்தி, பர்கூர், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், அத்தாணி, நகலூர், பர்கூர் உள்பட பல்வேறு கிராமங்களில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதாவது, திருமண அழைப்பிதழ் போல் "தேர்தல் திருவிழா அழைப்பிதழ்" என அச்சிட்டு வீடு, வீடாக சென்று, பொதுமக்களிடம் வழங்கி கட்டாயம் வாக்களிக்க வருமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலை நாட்டிட அன்புடன் அழைக்கிறோம் என அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Updated On: 13 April 2024 4:00 AM GMT

Related News

Latest News

  1. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  2. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  3. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  4. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  5. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  6. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  7. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மி.மீ மழை பதிவு