அந்தியூரில் போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வு முகாம்
முகாமில் பேசிய அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி/
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், டி. என். பாளையம் அன்னை சம்பூரணி பூரணியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது.இந்த முகாமின் ஒரு பகுதியாக, இன்று காலை பள்ளி வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை பானுமதி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்தியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்தி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான அவசியம் குறித்தும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் போது, உண்டாகும் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், கல்லூரி என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேஷ், கலையரசி, என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் முகமது பிலால் மற்றும் 40க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu