பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த சுகாதார விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பருவாச்சியில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பருவாச்சியில் காசநோய் ஒழிப்பு, டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டாரம் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட பருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காசநோய் ஒழிப்பு மற்றும் டெங்கு, மழைக்கால நோய்கள், பாதுகாப்பான குடிநீர் குறித்து சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காச நோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மழைக்கால நோய்கள் அதன் பாதுகாப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பராமரிப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு சுய மருத்துவம் தவிர்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய பரிசோதனை மற்றும் சேவைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, உப தலைவர் சுப்பிரமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், காச நோய் சுகாதார மேற்பார்வையாளர் புவனேஷ்வரி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்,சுகாதார ஆய்வாளர்கள் ஜெயஹரி, குப்பன், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள், ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மைய தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 70 பேர்கள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவின் மூலமாக மார்பக நுண் கதிர் பட பரிசோதனை, சளிப் பரிசோதனை, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்