பெருந்துறை வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்..!

பெருந்துறை வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்..!
X

பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

பெருந்துறை வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் புகையிலை எதிர்ப்பு, டெங்கு தடுப்பு மற்றும் இளம் வயது திருமண எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.


இந்த முகாமில் புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்து பராமரிக்க வேண்டிய வழிமுறைகள், குடிநீரில் குளோரினேசன் செய்வதின் அவசியம், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், வயிற்றுப்போக்கு நோயின் காரணிகள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், காலாவதியான உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், ஓஆர்எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் நன்மைகள், இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் தாய் சேய் மரணங்கள், பெண் கல்வியின் முக்கியத்துவம், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம் அதன் பயன்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் உடல் நல பாதிப்புகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் தமிழ்ச்செல்வன், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பேபி, வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்