ஈரோடு: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல்

பைல் படம்
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்,கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 19 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு, நேர்காணல் ஏப்ரல் 26 முதல் 29ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
ஈரோடு பாரத ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் உரிய நேரத்தில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகள் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழுடன் நேர்காணலுக்கு வர வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை எனில் தகுந்த ஆதாரங்களுடன் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று நேர்காணலுக்குத் தகுதியுள்ளவர் எனில் அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம், நேர்காணல் அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்காணால் வளாகத்துக்குள் செல்வதற்கு, அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu