கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
X

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை.

எஸ்.கணபதிபாளையத்தில் மனைவி மற்றும் மகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்-அந்தியூர் சாலையில் உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராசு மகன் செந்தில்குமார். போர்வேல் ரீக் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி இந்திராணி. இவர்களுக்கு ஜெய்ஸ்ரீ என்ற மகளும், மிதுன் சக்கரவர்த்தி என்ற மகனும் உள்ளனர். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறில், மனைவி கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு மகளுடன் சென்று விட்டனர்.

இதனால், மனமுடைந்த நிலையில் காணப்பட்ட செந்தில்குமார் இன்று அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீயில் எரிச்சல் தாங்கமுடியாமல் கோபி-அத்தாணி சாலையில் உருண்ட செந்தில்குமாரை அக்கம்பக்கத்தினர் சாக்குப்பையை கொண்டு தீயினை அணைத்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!