கோபிசெட்டிபாளையம் அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

கோபிசெட்டிபாளையம் அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
X

வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்ட காட்சி.

கோபிசெட்டிபாளையம் அருகே 2 வீடுகளின் முன்பக்க கதவு மற்றும் பூட்டை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஜோதிநகர் விரிவாக்க வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அரசு போக்குவரத்தில் டிரைவர். சம்பவத்தன்று விஜயகுமார், மனைவி மவுனாகீதாவும் பெங்களூருவில் உள்ள உறவினர் சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாறையால் நெம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது வீட்டில் கொள்ளை ஏதும் போகவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும் வீட்டின் அருகில் பழனிச்சாமி என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் சென்று பார்த்தபோது ஏதும் கொள்ளை போகவில்லை. இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில், 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்து வாகனத்தை பழனிச்சாமி வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார்.

பின்னர், விஜயகுமார் வீட்டில் கொள்ளையடிக்க செல்வதும், 30 நிமிடங்களுக்கு பிறகு, பழனிச்சாமி வீட்டில் கொள்ளையடிப்பது பதிவாகி இருந்தது. இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது