கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் அஷ்டமி பூஜை
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஸேக பூஜை.
கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் இன்று மகாதேவாஷ்டமியை முன்னிட்டு 108 சங்காபிஸேக பூஜை நடந்தது. மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி, காலபைரவர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது என கருதப்படுகிறது. இந்த நாளில் சிவாலயங்களில் உள்ள காலபைவருக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதிலும் குறிப்பாக கார்த்திகை மாதத்தில் தேய்பிறை நாளில் வரும் ருத்ராஷ்டமி மிக விசேசமானது என்றும் அந்த அஷ்டமியை மகாதேவாஷ்டமி என்றும் அழைப்பது உண்டு.
ஆகவே மற்ற மாதங்களில் வரும் அஷ்டமியை விட இந்த அஷ்டமியை மிக சிறப்பானதாக கொண்டாடுவது உண்டு. அந்த வகையில் இன்று கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத மகாதேவாஷ்டமி பூஜை நடந்தது. பூஜையில் பைரவருக்கு 108 சங்குகளில் பலவித திரவியங்களை நிரப்பி சங்காபிஸேகம் நடத்தப்பட்டது.பூஜையை கோயில் சிவாச்சாரியர் ராமலிங்க சிவாச்சாரியர் முன்னின்று நடத்தினர். நிகழ்வில் பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதேபோன்று கொடுமுடியை அடுத்த ஏமகண்டனூரில் உள்ள ஆச்சியம்மன் கோயிலிலு்ம் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu