/* */

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் பார்க்க கோவில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்
X
ஆருத்ரா தரிசனம்.

கொடுமுடி:-

கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது. இதனையொட்டி நடராஜர் சிவகாமி அம்மன் நாயன்மார் நால்வருக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கொடுமுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்தனர்.

கோபிச்செட்டிப்பாளையம்:

கோபி பச்சை மலை மரகதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதேபோல் கோபி சிவன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில், பாரியூர் அமர பணீஸ்வரர் கோவில், காசிபாளையம் காசிவிஸ்வநாதர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.

சென்னிமலை:

சென்னிமலை நகரின் மையப்பகுதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது. நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வண்ண மலர் அலங்காரத்தில் இருந்த நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பவானி:

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று. அதிகாலை நடராஜருக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை இளநீர் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜர்-பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் உற்சவ மூர்த்தி திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 20 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  3. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  4. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  5. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  6. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
  7. இந்தியா
    சிவில்சர்வீஸ் தேர்வு எழுதிய ஏஐ! மார்க் எவ்வளவு தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள்...
  9. பொன்னேரி
    பாதாள கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா
  10. இந்தியா
    ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்