சிவனடியாரை தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்க -சிவனடியார்கள் அமைப்பு கோரிக்கை

சிவனடியாரை தாக்கிய திமுக பிரமுகரை கைது செய்க -சிவனடியார்கள் அமைப்பு கோரிக்கை
X

கைது செய்ய வலியுறுத்தி, இன்று  எஸ்.பி.அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்ட சிவனடியார்கள்.

திமுக பிரமுகர் விஜயகுமாரின் அடாவடி செயல் தமிழகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளையானது, சிவாலயங்களுக்கு உழவரப்பணியும், சமூகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தொண்டு என பல திருப்பணிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் சிவனடியார்கள் அமைப்பின் ஈரோடு மாவட்ட துணை பொறுப்பாளராக இருந்து சமுதாயத்தில் ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்து வருபவர் சிவனடியார் சரவணன். கடந்த 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடியார்கள் ஆலய உழவரப்பணி செய்து விட்டு இரவு 8.15 மணியளவில் தங்கள் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது உழவாரப்பணி பொருட்களை சிவனடியார்கள் இறக்கி வைக்கும் போது, திமுக பிரமுகர் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் கடுமையான வார்த்தைகளை பேசி, சிவனடியாரை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இறைவனையும் சிவனடியார்களையும், தகாத தீய வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதை தட்டிக் கேட்ட சிவனடியார் சரவணனை முகத்தில் குத்தி கடுமையாக தாக்கியுள்ளார், நிலை தடுமாறி கீழே விழுந்தவரை நெஞ்சில் ஏறி மிதித்துள்ளார். இதனால் மூர்ச்சையற்று மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவரை சுற்றியிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். திமுக பிரமுகரின் இந்த அடாவடி செயல் தமிழகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஈரோடு டவுண் காவல் நிலையத்தில் சிவனடியார்கள் புகார் அளித்துள்ளனர். அவரின் பெயரில் FIR பதிவு செய்தும், இது வரை விஜயகுமாரை கைது செய்யவில்லை என கூறுகின்றனர். சிவனடியாரை தாக்கிய விஜயகுமாரை உடனடியாக கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவனடியார்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவனடியாரை தாக்கிய திமுகவைச் சார்ந்த ஈரோடு விஜயகுமாரை கைது செய்யக் கோரி ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் இன்று சிவனடியார்கள் மனு கொடுத்துள்ள்ளனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!