ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு

ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு
X
பெண் பயணிகள் சண்டை போட்ட பேருந்து.
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் முககவசம் அணிவது தொடர்பாக 2 பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் மாநகர பேருந்தில் ( வண்டி என் 3 ) இரண்டு பெண்கள் பேருந்து நிலையத்தில், பவானி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். இந்த பேருந்தில் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். முககவசம் அணியாத பெண்னை பார்த்து முககவசம் அணிய நடத்துனர் மற்றும் பெண் பயணிகள் கூற, நான் முககவசம் அணிய முடியாது என குறிப்பிட்ட பெண் கூறினார். வாக்குவாதம் முற்றவே இரண்டு பெண்களுக்கும், குடுமிபிடி சண்டை முற்றியது. இதனால் பேருந்து பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டும் பெண்களின் குடுமி பிடி சண்டை ஓயவில்லை. பின்னர், ஈரோடு வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் காவல் துறையினர் வந்து சமாதானம் செய்து பேருந்தை அனுப்பி வைத்தனர். இதனால் மாநகர பேருந்து அரைமணி நேரம் தாமதமாக சென்றது. இரண்டு பெண்கள் மாநகர பேருந்தில் குடுமி பிடி சண்டை போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!