அந்தியூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நியமன ஆணை

அந்தியூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நியமன ஆணை
X

அந்தியூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.

அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, அந்தியூர், அத்தாணி, ஒலகடம், அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை ஆகிய ஐந்து பேரூராட்சிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!