ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாநகராட்சியில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
X

ஈரோடு மாநகராட்சி அலுவலகம்.

ஈரோடு மாநகராட்சியில் காலியாக உள்ள பொது சுகாதார மேலாளர் பணியிடத்துக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி, தேசிய நகர்ப்புறத் திட்டத்தில் பொது சுகாதார மேலாளர் பணியிடம் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. எம்எஸ்சி பூச்சியியல் பாடத்துடன், விலங்கியல் படித்தோர் விண்ணப்பிக்கலாம்.பணிவரன்முறை நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய சான்றிதழ்களுடன் ஈரோடு மாநகராட்சி ஆணையரை அணுகலாம். வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!