ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
X

முதல்வர் மருந்தகம்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தினவிழாவில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம்/டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்கு (10sqm) குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும். சொந்த இடம் எனில் அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது இடம் ஒப்பந்தப் பத்திரம் (Rental Agreement Documents) பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். தொழில்முனைவோருக்கு முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கு கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் இதில் விண்ணப்பிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து முதல் தவணை மானியத் தொகை ரூ.1.50 இலட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்படும் தொழில்முனைவோர் முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி

கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு, ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
Similar Posts
ஈரோட்டில் 36 பயனாளிகளுக்கு ரூ.68.35 லட்சம் கடனுதவி வழங்கிய பால்வளத்துறை அமைச்சர்
ஈரோடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு
அத்தாணியில் ரூ.1.34 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை
9 லட்சம் கடன் வேணுமா? கூகுள் பே தருது வாங்கிக்கோங்க..!
ஈரோடு பூம்புகாரில் புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்களின் கண்காட்சி துவக்கம்
அந்தியூரில் பெண்ணை மானபங்கம் செய்து, போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் கைது!
சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் காசநோய் ஒழிப்பு, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சத்தியமங்கலம் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆய்வு
கோபி அருகே எறும்புத் திண்ணியின் ஓடுகளை கடத்தியவர் கைது
அந்தியூர் அருகே மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் மாரடைப்பால் மரணம்
ஈரோட்டில் 65வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் துவக்கம்
சுத்திக்கிட்டே இருக்கா? Wi-Fi signal ராக்கெட் ஸ்பீடுக்கு மாத்தலாம் வாங்க!