வேகமாக‌ நிரம்பி வரும் ஆப்பக்கூடல் ஏரி

வேகமாக‌ நிரம்பி வரும் ஆப்பக்கூடல் ஏரி
X

ஆப்பக்கூடல் ஏரி.

ஆப்பக்கூடல் ஏரியானது ஓரிரு நாட்களில் முழு கொள்ளவையும் எட்டும் நிலையில் உள்ளது.

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு ‌முன்பு பெய்த மழையால், வரட்டுப்பள்ளம் அணை, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்திபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறி, ஆப்பக்கூடல் ஏரியை நோக்கி செல்கிறது. தற்போது ஆப்பக்கூடல் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியானது பவானி-சத்தி நெடுஞ்சாலை அருகே 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று முறை மழை பெய்தால் ஆப்பக்கூடல் ஏரி முழு கொள்ளளவையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!