பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம்: துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் கைது
X

கைது செய்யப்பட்ட மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி, கிராம நிர்வாக அலுவலர் சரத்குமார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன். இவர் பட்டா மாறுதல் கேட்டு பள்ளபாளையம் அ கிராம நிர்வாக அலுவலர் சரத்குமாரிடம் விண்ணப்பித்து இருந்தார்.

இதற்கு, கிராம நிர்வாக அலுவலர் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் இதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேஷ் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு தனசேகரன் கொண்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து, பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது, திட்டமிட்டபடி அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய பெருந்துறை வட்ட மண்டல துணை வட்டாட்சியர் நல்லசாமி அங்கு வந்தார். தொடர்ந்து, அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..