பர்கூர் அடுத்த மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : எஸ்பி வழங்கல்
ஈரோடு மாவட்டம் கத்திரி மலை வாழ் மக்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் போலீஸ் எஸ்பி சசிமோகன் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கத்திரி மலை கிராமத்தில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகைகள் மலை கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சட்டவிரோத செயல்கள், ஆதார் அட்டையின் முக்கியத்துவம், நமது பாதுகாப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வுகளை மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவித்தொகைகள், கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பூசி போடுதல் போன்றவை குறித்தும் பேசினார்.
மேலும் மலைப் பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மலைவாழ் மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் கத்திரி மலையைச் சேர்ந்த 90 மலைவாழ் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள், சோப்பு பவுடர், பிளாஸ்டிக் குடம், வெள்ளை வேட்டி, போர்வை, துண்டு ,தலையணை, சில்வர் தட்டு பாய் ஆகியவற்றை வழங்கினார்.
30 பள்ளி குழந்தைகளுக்கு தலா ஒரு டிபன் பாக்ஸ் ,எழுது பொருட்கள், மற்றும் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு சோலார் விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினார்.
நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சென்னம்பட்டி வனசரகர் செங்கோட்டையன்,
ஈரோடு கிழக்கு அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், மாவோயிஸ்ட் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ,சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், மற்றும் வனத்துறை ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu