அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது

அந்தியூரில் போக்சோ சட்டத்தின் கீழ் இரு வாலிபர்கள் கைது
X
அந்தியூரில், இருவேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் ஒந்தனை பகுதியைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அந்தியூர் தாசளியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று மணிகண்டன் அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து. அங்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதேபோல், ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் தொடர்புடைய சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பவரை, பவானி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!