ஈரோட்டில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஓட்டுநருக்கும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றின் வாகனம், பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் வழியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. மாணவர்கள் அலறித் துடித்ததைக் கேட்டவர்கள் உடனடியாக வாகனத்தின் அருகே சென்று முடிந்தவரை உயிர் சேதமின்றி அனைவரையும் காப்பாற்றிவிட்டனர்.
கிரேன் உதவியுடன் வாகனத்தை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மாணவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் கண்கலங்கிப் போயினர். நடந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அக்கம்பக்கத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறையினர் இதுகுறித்து வாகன ஓட்டுநர் மற்றும் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu