அந்தியூர் அருகே தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

அந்தியூர் அருகே சாக்கடை நீர் பிரச்சனையில் தீர்வு காணததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்தனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆத்தம்பாளையம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியின் அருகே உள்ள அந்தியூர் பர்கூர் பிரதான சாலையில் சாக்கடை கட்டும் பணி நடைபெற்று வந்தது.

புதுப்பாளையம் ,வ.உ.சி நகர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சாக்கடை நீரை ஆத்துப்பாளையம் பகுதியில் தேக்கி வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்களுக்கு குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறு சாக்கடை நீர் தஙகளது பகுதிகள் வழியாக தேக்கமடைந்தால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் எனக்கூறி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் இல்லையென்றால் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க பேவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த அந்தியூர் காவல்துறையினர் பிரச்சனை சம்பந்தமாக உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்