கார் மோதியதால் விபத்து...

அந்தியூர் அருகே விபத்து

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் இன்பராஜ். டிரைவரான இவரும், அந்தியூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரும் கோபியில் இருந்து அத்தாணி வழியாக ஆம்னி வேனில் அந்தியூர் சென்று கொண்டிருந்தனர்.

ஆம்னியை இன்பராஜ் ஓட்டி சென்றுள்ளார் அத்தாணி கைகாட்டி அருகே ஆம்னி சென்று கொண்டிருந்தபோது, வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள குருவரெட்டியூரிலிருந்து கள்ளிப்பட்டி சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆம்னியின் பக்கவாட்டில் மோதியுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்னி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஆம்னி டிரைவர் இன்பராஜ் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அப்பகுதியினர் ஆம்னி வேனை தூக்கி நிறுத்தி, இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் உட்பட நால்வரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து உண்டாக்கிய குருவரெட்டியூரைச் சேர்ந்த டிரைவர் சிவலிங்கம் காயமின்றி உயிர் தப்பினார்.

தகவலறிந்த ஆப்பக்கூடல் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!