அந்தியூர் பேருராட்சி வீதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று எம்எல்ஏ ஆய்வு

சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச்சலம், பேரூராட்சி வீதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படவில்லை என எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாச்சலம், பேரூராட்சி வீதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் அடங்கியுள்ளன. அந்தியூர் தவிட்டுப்பாளையம் ஆகிய இரண்டு நகரங்களிலும் உள்ள சாக்கடை சுத்தம் செய்தல், குப்பைகளை நாள்தோறும் அகற்றும் பணியில், சுமார் 400க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் குவிந்திருக்கும் குப்பைகளை சரிவர அகற்றுதல் இல்லை என அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இன்று அதிகாலை அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், பணிக்கு வந்திருந்த தூய்மை காவலர்களுக்கு இன்று பணியையும், பணி செய்யும் இடங்களையும் பிரித்து அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, அந்தியூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் குப்பைகள் தேங்கி உள்ளனவா என ஆய்வு செய்யும் பொருட்டு, இருசக்கர வாகனத்தில் சென்று நேரில் பார்வையிட்டார். மேலும், குப்பைகள் அதிகமுள்ள இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், நாள்தோறும் அனைத்து வார்டுகளிலும் குப்பகளை முழுமையாக சேகரித்து, சுகாதாரமான பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என தூய்மை பிரிவு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். மீண்டும் குப்பைகளை அகற்ற வில்லை என புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu