அந்தியூரில் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம்

அந்தியூரில் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம்
X
அந்தியூர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார்.

தமிழகம் முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், அந்தியூர் சட்மன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து அந்தியூர் வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானாவில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் நலன் காக்கும் அதிமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில், பெண்கள் பாதுகாப்பு, விவசாய பாதுகாப்பு, தொழில் முனைவோர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீனாட்சிசுந்தரம், பாஜக மாவட்ட செயலாளர் விஜயகுமார், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கோபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் தலைவர் சின்னத்தம்பி, கூட்டுறவு சங்கத் தலைவர் பாலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி