வனப்பகுதியில் தேக்கு மரம் கடத்திய நபர் கைது : நாட்டு துப்பாக்கி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தண்டா வடக்கு பிரிவு காப்புக்காடு வனப்பகுதியில் சென்னம்பட்டி வனச்சரக அதிகாரி செங்கோட்டையன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சின்னமலை அடிவாரம் வனப்பகுதியில் புதர் மறைவில் ஒருவர் ஒளிந்து இருப்பதை பார்த்த வனத்துறையினர், அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பதும், 6 அடி நீளம் கொண்ட நான்கு தேக்கு மரக்கட்டைகள் மற்றும் ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் மான் ஒன்றை வேட்டையாடியதும், 250 கிராம் அளவுள்ள வத்தல் மான்கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடமிருந்து தேக்குமரக்கட்டைகள், துப்பாக்கி, மான்கறி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மாதேஷ்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu