ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளி கைது

அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹோட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் அதே பகுதியில் ஹோட்டல் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து சென்றுள்ளார். பின்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தையடுத்து, சிறுமி கூச்சலிட ஆரம்பித்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது தேவராஜன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், சம்பவம் குறித்து சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார் . பின்னர் வழக்கு குறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். இன்று அதிகாலை, தவிட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த தேவராஜனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்