கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்த திமுக எம்எல்ஏ

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணியை  தொடக்கி வைத்த திமுக எம்எல்ஏ
X

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் பணியை தொடக்கி வைத்த திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்

பிரம்மதேஷம் கால்நடை மருந்தக எல்லைக்கு உள்பட்ட மொத்தம் 5700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போப்படுகிறது

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சி, மாக்கல்புதூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் பழனிவேல் தலைமையில் நடைபெற்றது,

இதில் சிறப்பு அழைப்பாளராக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்துகொண்டு, பிரம்மதேஷம் கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட மொத்தம் 5700 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஷ்ணுகந்தன், மருத்துவர் அர்ஜுனன், கால்நடை ஆய்வாளர் சர்மிளா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கட்சியினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!