/* */

அந்தியூர்: பேரூராட்சி தலைவர் தேர்தலை புறக்கணித்து கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா சேகர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்

HIGHLIGHTS

அந்தியூர்: பேரூராட்சி தலைவர் தேர்தலை புறக்கணித்து கம்யூனிஸ்ட் வெளிநடப்பு
X

அந்தியூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர்

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக 13 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். அதிமுக இரு வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக கூட்டணியில் அந்தியூர் பேரூராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி அக்கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

திமுக கூட்டணியில் அந்தியூர் பேரூராட்சித் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள் தேர்தலை புறக்கணித்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இன்று நடைபெற்ற அந்தியூர் பேரூராட்சி தேர்தலில் தலைவராக 15வது வார்டு திமுக வேட்பாளர் பாண்டியம்மாள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அடுத்து, 3வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கீதா சேகர் பேரூராட்சி தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொல்லங்கோடு, திருமுருகன்பூண்டி ஆகிய இரண்டு நகராட்சித் தலைவர் பதவிகளும், பெரியநாயக்கன்பாளையம், வீரவநல்லூர், அந்தியூர் ஆகிய மூன்று பேரூராட்சித் தலைவர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன. இவற்றில் இரு நகராட்சிகளிலும், திமுக கவுன்சிலர்கள் போட்டியிட்டு தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளனர். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சிகளையும், கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இப்போது அந்தியூர் தலைவர் தேர்தலிலும் திமுக கைப்பற்றியுள்ளதால், கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருத்த ஏமாற்றத்தில் உள்ளனர்

Updated On: 26 March 2022 8:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்