லாரி ஓட்டுனரிடமிருந்து 1.3 லட்சம் பறிமுதல்

லாரி ஓட்டுனரிடமிருந்து 1.3 லட்சம் பறிமுதல்
X
அந்தியூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள கிட்டம்பட்டி என்ற இடத்தில் தேர்தல் நிலைக்குழு அலுவலர் வீரக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கோவை கருமத்தம்பட்டியில் செங்கல் லோடு இறக்கிவிட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கொளத்தூர் லக்கம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் தேவராஜிடம் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் ரொக்கபணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் நிலைக் குழு அதிகாரிகள், அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture