ஈரோட்டில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

ஈரோட்டில் 100 %  வாக்குப்பதிவை வலியுறுத்தி  மினி மாரத்தான் போட்டி
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அந்தியூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ கொடி அசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி முக்கிய வீதிகள் வழியாக சென்று குருநாதசாமி கோவிலில் நிறைவுபெற்றது.

முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் 100% வாக்களிப்பு உறுதி செய்யும் பொருட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்