100 நாள் வேலை: மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊராட்சி மக்கள் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டம்!
100 நாள் வேலை பணியாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராட்டம்
அந்தியூரில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்பட மைக்கேல்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் 100 நாள் வேலைக்கான முழு பணம் ரூ.319 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அந்தோணி தலைமையில் 100 நாள் வேலைக்கு கொடுக்க வேண்டிய ரூ.319 முழுமையாக கொடுக்க கோரியும் கடந்த வாரம் கொடுக்க வேண்டிய ரூ.319 க்கு பதிலாக வழக்கமாக கொடுக்கக்கூடிய ரூ.290 கொடுப்பதை தவிர்த்து, ரூ.200 மட்டும் கொடுத்துள்ளதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தி, வேறு பணித்தள பொறுப்பாளரை நியமித்து பிரச்சினை ஏற்படாத வகையில் கூலி வழங்கப்படும் என கூறினார். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu