அமைச்சர் செங்கோட்டையன் ஓய்வு எடுத்தப் பள்ளியில் அதிரடி சோதனை

அமைச்சர் செங்கோட்டையன் ஓய்வு எடுத்தப் பள்ளியில் அதிரடி சோதனை
X
கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோபிச் செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்றைய பிரசாரத்தின் போது தனியார் பள்ளியில் சற்று ஓய்வெடுத்தார். இந்த நிலையில் இன்று காலை வருமானவரித்துறை சோதனை அந்த பள்ளியில் நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - அத்தாணி சாலையில் தோப்பூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் நிர்வாகிகளாக உள்ளனர்.

இப்பள்ளியில், அதிமுகவினர் பணத்தைப் பதுக்கியுள்ளதாகவும், இங்கிருந்து வேட்பாளர்களுக்குப் பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் சென்றதையடுத்து, ஈரோடு வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பகல் 12.30 மணிக்கு சோதனை முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். சோதனை குறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் கூறுகையில், "அந்தியூரில் இருந்து கோபி சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று இந்த சாலை வழியாகச் சென்றபோது, பள்ளிக்கு வந்து காபி சாப்பிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துச் சென்றார்..

இதையடுத்து, அமைச்சர் இங்கு பணத்தைப் பதுக்கி விட்டார், இங்கிருந்து பணம் அனுப்பப்படுகிறது என்று யாரோ வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நான்கு கார்களில் வந்த அதிகாரிகள் காலை 7 மணியில் இருந்து மதியம் வரை சோதனை செய்தார்கள். பள்ளி வார்டன், தலைமை ஆசிரியர் தொடங்கி வாட்ச்மேன் வரை 8 பேரின் செல்போன்களைப் பறித்துக் கொண்டனர்.சோதனைக்குப் பின் பள்ளி ஆவணங்கள் சிலவற்றை ஜெராக்ஸ் எடுத்தனர். சோதனை முடிவில், தவறான தகவல், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்" என்றார்.

Tags

Next Story