குப்பையில் விண்ணப்ப படிவங்கள்-விவசாயிகள் வேதனை

குப்பையில் விண்ணப்ப படிவங்கள்-விவசாயிகள் வேதனை
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பிரதம மந்திரி கிசான் திட்ட விண்ணப்ப படிவங்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் அப்பகுதியில் உள்ள ஏராளமான சிறு விவசாயிகள் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி கிடைக்க வேண்டி கிராம நிர்வாக அலுவலரிடம் படிவங்களை வழங்கியிருந்தனர். இந்நிலையில் பர்கூர் கிராம நிர்வாக அலுவலர், விவசாயிகளிடம் வாங்கிய படிவங்களை தனது கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விவசாயிகள் தங்களது படிவங்கள் குப்பையில் கிடப்பதைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தனர். தங்களுக்கு நிதி கிடைக்கும் என்று எண்ணி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்த நிலையில் அந்த மனுவை எவ்வித பரிசீலனையும் செய்யாமல் கிராம நிர்வாக அலுவலர் குப்பையில் வீசி உள்ளார். தங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக கிடைக்க வேண்டும் என்றும் தங்களது படிவங்களை குப்பையில் வீசிய கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business