இலாபம் தரும் சூரியகாந்தி- விவசாயிகள் மகிழ்ச்சி

இலாபம் தரும் சூரியகாந்தி- விவசாயிகள் மகிழ்ச்சி
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள் அதிக மகசூல் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராசு. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டு 90 நாட்களில் அறுவடைக்கு வருவதாகவும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை லாபம் தருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் பூக்களுக்கு வாரம் ஒருமுறை சொட்டுநீர் மூலம் தண்ணீர் தெளித்தால் போதுமானதாக இருப்பதாகவும், ஏக்கர் ஒன்றுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே முதலீடு தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் இப்பகுதியில் சூரியகாந்தியை பயிரிட்டு வருவதாகவும் தெரிவித்தார். வியாபாரிகள் தங்களது தோட்டத்திற்கே வந்து சூரியகாந்தி பூக்களைப் பறித்துக் கொண்டு தங்களுக்கு உரிய விலையை அளிப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்