உடல்நிலை சரியில்லாததால் மாணவி தற்கொலை

உடல்நிலை சரியில்லாததால் மாணவி தற்கொலை
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எட்டிக்குட்டை பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகள் கோதைநாயகி (17). இவர் ஆப்பக்கூடல் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தனது வீட்டில் உள்ள அறையில் கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டு மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மாணவி உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!