போகிபண்டிகையை மாசு இல்லாமல் கொண்டாட அமைச்சர் கருப்பணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்று பொங்கல் போகிப்பண்டிகையை மாசு இல்லாத வகையில் கொண்டாட வேண்டுமென அமைச்சர் கருப்பணன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடுமாவட்டம் அந்தியூர் அருகே பெருமுகை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கினை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பெருமுகை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கினை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மகப்பேறு பெண்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், "ரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காமல் விட்டாலும் அதிமுகவிற்கு எவ்வித பாதகமும் ஏற்படப்போவதில்லை. விரைவில் அதிமுகவில் தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்க உள்ள நிலையில் கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். அதிமுகவில் இடம்பெறும் கூட்டணியினர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்கள்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தோனி மடுவு மணியாச்சி பள்ளம் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய அரசின் வனத்துறையிடம் அனுமதி பெற இருப்பதால் விரைவில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை போன்று பொங்கல் பண்டிகைக்கான போகிப் பண்டிகையை மாசு இல்லாத வகையில் தமிழக மக்கள் கொண்டாட வேண்டுமென வலியுறுத்திய அமைச்சர் கருப்பணன் போகிப்பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசின் அளவை கண்காணிப்பதற்காக நவீன கருவிகள் சென்னையில் நடமாடும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருகின்றன. தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொடர் கண்காணிப்பில் கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன் மற்றும் கோபி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!