விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. கடந்த, சில நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம், கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது, 31.86 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும், 1.6 அடி மட்டுமே உள்ள நிலையில், சங்கராப்பாளையம், புதுப்பாளையம், கெட்டிசமுத்திரம், அந்தியூர், பிரம்மதேசம் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா